முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபுணர்களால் கூட கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரிசோதனைக்கு சிடி ஸ்கேன் வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய சி.டி.ஸ்கேன்களை பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை 2176 கர்ப்பிணி பெண்கள் கொரோனா சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டு 1515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறினார். 

10 நாட்களில் கொரோனா குறையும் என முதல்வர் கூறி இருந்த நிலையில் அந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைகிறது என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா வைரஸ் உள்ளது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து