சிவராஜ்சிங் சவுகான் குணமடைய துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
O Pannirselvam  2020 07 26

Source: provided

சென்னை : கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அவர் பூரண குணமடைய வேண்டும் என்றும், மக்கள் பணியை மீண்டும் தொடர வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து