கொள்கை பரப்பு துணை செயலராக விந்தியா: அ.தி.மு.க.வில் புதிய அமைப்பு செயலாளர்கள் நியமனம்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
EPS-OPS 2020 07 26

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்து உள்ளனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களாக வி.கருப்பசாமி பாண்டியன்(முன்னாள் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்டம்), திருப்பூர் சி.சிவசாமி (முன்னாள் எம்.பி., திருப்பூர் மாநகர் மாவட்டம், முன்னாள் எம்.பி.), இசக்கி சுப்பையா(, முன்னாள் அமைச்சர், நெல்லை மாநகர் மாவட்டம்), எம்.புத்திச்சந்திரன்( முன்னாள் அமைச்சர், நீலகிரி மாவட்டம்), டி.ரத்தினவேல்(முன்னாள் எம்.பி., திருச்சி மாவட்டம்), வி.மருதராஜ்(திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர்), பி.ஜி.ராஜேந்திரன்( முன்னாள் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்டம்), திருத்தணி கோ. அரி( திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்), வாலாஜாபாத் கணேசன்(காஞ்சீபுரம் மாவட்டம்), எஸ்.ஆசைமணி(மயிலாடுத்துறை மாவட்டம்), ஏ.கே.சீனிவாசன்( நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், பாப்புலர் வி.முத்தையா(நெல்லை மாநகர் மாவட்டம்), நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.  இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக டாக்டர் வி.பி.பி. பரமசிவம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, இணை செயலாளர்களாக ஆ.இளவரசன், குமாரசாமி, தண்டரை கே.மனோகரன், துணைச்செயலாளராக கே.எஸ்.துரைமுருகன், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக கே.சிங்காரம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளராக அ.மனோகரன் எம்.எல்.ஏ., மகளிர் அணி இணைச்செயலாளராக கணிதா சம்பத், வக்கீல் பிரிவு இணைச்செயலாளராக பாபு முருகவேல், விவசாய பிரிவு துணை செயலாளர்களாக முருகமலை சின்னசாமி, ஒ.வி.ஆர்.ராமசந்திரன், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் வி.எஸ்.விஜய், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். 

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து