முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம் தந்தை மறைவு : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வயது முதிர்வு காரணமாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ம. முத்துராமலிங்கத்தின் தந்தை மரணமடைந்ததற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,  

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கத்தின் தந்தை கே. மணித்தேவர் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் முத்துராமலிங்கத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் மணித்தேவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து