கொரோனா தொற்று: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் டிஸ்சார்ஜ்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Radhakrishnan 2020 07 26

Source: provided

சென்னை : கொரோனாவில் இருந்து குணமடைந்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேரும் வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆனாலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர்.   

கடந்த 20-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 4 பேரும் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேரும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து