Idhayam Matrimony

பணி நியமன ஆணை பெற்ற ஜெயராஜ் மகள் பெர்சிஸ் தமிழக அரசுக்கு நன்றி

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கருணை அடிப்படையில் வருவாய் துறையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணை பெற்ற சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சிஸ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளம் சம்பவத்தில்  உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸ் நேற்று (27.07.2020)  தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய அரசுப் பணிநியமன ஆணையைப் பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நான்இறந்து போன ஜெயராஜின் மூத்த பெண் பெர்சிஸ். எனது தந்தையும், தம்பியும் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் எனக்கு வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளராக அரசால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்பம் அடைந்துள்ள வேதனையிலிருந்து மீள்வதற்கு தமிழக அரசு இந்த வேலையை எனக்குக் கொடுத்துள்ளது.

முதல்வர், சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அதை நியாயமான முறையில் விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று எங்களுக்கு promise செய்துள்ளார்.

இந்த விஷயத்தில் எங்களுக்கு support செய்த தமிழக அரசு, தமிழக மக்கள், அனைத்துக் கட்சியினர், அனைத்து சமுதாய அமைப்புகள், வியாபார சங்கங்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்பொழுது சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எங்களுக்கான நியாயத்தை நீதித்துறை வழங்கும் என்று நம்புகிறோம். அதற்கு தமிழக அரசும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். இந்த வழக்கை விரைவில் விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை விரைவில் வாங்கித் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

இந்த விஷயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து Media-க்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து