முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 5723 பேர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்த படியாக தமிழகம் 2-ஆம் இடம் வகிக்கிறது. தலைநகர் சென்னையில்  கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது.

ஆனால், சென்னையை தவிர்த்து பிற  மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,20,716-  ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரு நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது. 

ஆறுதல் அளிக்கும் விஷயமாக  நேற்று ஒரே நாளில் 5, 723  பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒருநாளில் 1,138-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து