கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரசார் கைது

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      தமிழகம்
KS Alagiri 2020 07 27

Source: provided

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான்  மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் அம்மாநில முதல்வர்  அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க.வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகை முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி, நேற்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து