திண்டுக்கல், தேனி உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Weather Center 2020 07 28

Source: provided

சென்னை : ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சை, திருவள்ளூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தெற்கு வங்க கடல், குமரிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து