சாத்தான்குளம் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி அறிக்கை தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Shathankulam CBI 2020 07 28

Source: provided

மதுரை : சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக முதலில் விசாரணையை மேற்கொண்ட  சி.பி.சி.ஐ.டி, ஐகோர்ட் மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  சீலிட்ட கவரில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சி.பி.ஐ.  தரப்பில் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த  சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து