11-ம் வகுப்பில் தோல்வியுற்ற பாடங்களை பிளஸ் - 2 படித்துக் கொண்டே எழுதலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2020      தமிழகம்
Sengottaiyan 2020 07 31

Source: provided

ஈரோடு : 12-ம் வகுப்பு படித்துக் கொண்டே 11-ம் வகுப்பில் தோல்வியுற்ற பாடங்களை மாணவர்கள் எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8,32,475 பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 2020 பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டே 11-ம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

11-ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். மேலும், 11-ம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12-ம் வகுப்பு செல்லலாம். 12-ம் வகுப்பு படித்து கொண்டே 11-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை எழுதலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து