முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 11-வது நாளாக அதிகரிப்பு: சவரன் ரூ. 41 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து 11வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை தொட்டது. 1961-ம் ஆண்டு இதே  தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு வெறும் 94 ரூபாய்தான். அப்போதே தங்கம் விலை கிடுகிடு உயர்வு என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. அந்த தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் ரூ. 41 ஆயிரம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். 

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ.41,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.57 அதிகரித்து ரூ.5,150 ஆக உயர்ந்திருந்தது. 

தங்கம் விலை கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது.  தொடர்ந்து 9-வது நாளாக சவரன் ரூ. 40,600-க்கும், 10-வது நாளாக சவரன் ரூ.40,824-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று காலை தொடர்ந்து 11-வது நாளாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து கிராம் ரூ.5,125-க்கும், சவரனுக்கு ரூ. 256 உயர்ந்து சவரன் ரூ.41,000-க்கும் காலையில் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ. 456 உயர்ந்து ரூ. 41,200-க்கும், கிராம் ரூ. 57 உயர்ந்து ரூ.5,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.10-க்கு விற்பனையானது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து