முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நேற்று 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் நேற்று 1,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,716 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,989 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று 1,201 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,131 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 10,596 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து