முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்க காங். தலைவர் சோமன் மித்ரா மறைவு : சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க  மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார். 

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் சோமன் மித்ரா (78). வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். கடந்த 1960-ம் ஆண்டுகளில் காங்கிரசில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக சோமன் மித்ரா திகழ்ந்தார்.

1992-1996, 1996-1998ம் ஆண்டுகளிலும், 2018-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்தும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக இருந்தார். மேலும், சீல்டா சட்டப்பேரவை தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

2008-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து சோமன் மித்ரா பிரிந்து சென்றார். 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங். சார்பில் டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014-ம் ஆண்டு மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இவருடைய மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து