அயோத்தி பூமிபூஜை விழாவில் பங்கேற்க எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு அழைப்பு இல்லை

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      இந்தியா
Advani 2020 08 01

Source: provided

அயோத்தி : வரும் 5-ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அயோத்தியில் வருகிற 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பூமி பூஜை விழாவில் பங்கேற்க பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. 

எனினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமாபாரதிக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்ட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து