216-வது நினைவு நாள்: சென்னையில் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி மலர்தூவி மரியாதை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். - அமைச்சர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Govt-1-Edappadi 2020 08 02

Source: provided

சென்னை : சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின்  நினைவு நாள் ஆண்டுதோறும் அரசின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று (2.8.2020) காலை 9.00 மணியளவில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மலர் தூவியும், அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். 

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசால், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை பெருமைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அன்னாரது நினைவு தினம் ஆடி 18-ம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. 

அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின்  திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று (ஆடி 18-ம் நாள்- 2.8.2020) காலை 9.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மலர் தூவியும், அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து