பீலா ராஜேஷ் மீதான புகாரை விசாரிக்க மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Beela Rajesh 2020 08 03

Source: provided

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் கூறப்பட்டுள்ளது. 

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறையின் திட்ட இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் எத்தனை பேருக்கு தாக்கியுள்ளது என்று தினசரி ஊடகங்களுக்கு பீலா ராஜேஷ் தான் தகவல் தெரிவித்து வந்தார்.

அதை தொடர்ந்து அவர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பல கோடி மதிப்பில் பண்ணை வீடு கட்டியுள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் பீலா ராஜேஷ் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், ரூ. 27 லட்சம் வாடகை வருவாயாக குறிப்பிட்டுள்ள நிலையில், அதற்கான சொத்து ஆதாரம் இல்லை என்றும் வாங்கிய 6 சொத்துகளை குறிப்பிட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் செந்தில் குமார் என்பவர் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்த தலைமைச் செயலாளருக்கும், மத்திய பணியாளர் நலத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து