சிவராஜ் சிங் சவுகானுக்கு ராக்கி அணிவித்த நர்ஸ்

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
Shivraj Singh Chauhan 2020 08 03

Source: provided

போபால் : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு அங்கு பணியாற்றும் செவிலி சரோஜ் என்பவர் சகோதர தின வாழ்த்துகள் தெரிவித்து ராக்கி அணிவித்தார்.

மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய காலத்தில் மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே இருந்தார், அவரின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யபப்படாமல் இருந்தது. 

இதனால் கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிப்பதில் பெரும் இடையூறும், சிரமங்களும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஏற்பட்டது. அதன்பின் பா.ஜ.க. தலைமையின் அனுமதி பெற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனால் தொடக்கத்தில் கொரோனா நோய் தொற்று விரைவாக அதிகரித்த நிலையில் அதன்பின் எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கையால் படிப்படியாகக் குறைந்தது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் அரவிந்த்சிங் பகதூரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் சிவராச் சிங் சவுகானுடன், அரவிந்த் சிங் பங்கேற்றிருந்ததால் உடனடியாக சிவராஜ் சிங்குக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ரக்‌ஷா பந்தன் தினமான நேற்று மருத்துவமனையில் சிவராஜ் சிங் சவுகான் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் மருத்துவ பணிகள் செய்து வரும் செவலியான சரோஜ் என்பவர் சகோதர தின வாழ்த்துகள் தெரிவித்து ராக்கி அணிவித்தார். இதற்கு சிவராஜ் சிங் சவுகான் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து