குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் நீக்கம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
EPS-OPS 2020 08 01

Source: provided

சென்னை : கட்சி கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்ட காரணத்தால் குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீதி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஞானம் எஸ்.ஜெகதீஷ், தூத்துக்குடி மாவட்ட ஒட்டப்பிடாரம் ஒன்றியம் வள்ளிநாயகிபுரம் ஊராட்சி கழக முன்னாள் செயலாளர் காந்தி(எ) காமாட்சி ஆகியோர் இன்று(நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து