உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
central government 2020 08 03

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும் உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதற்குமான 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் யோகா, உடற்பயிற்சி மையங்களை நாளை 5-ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மதுபான விடுதிகளுக்கான தடை நீடிக்கிறது. இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் பொருளாதார மந்தநிலை, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போது நாள் தோறும் 50,000 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பரவி வரும் நிலையில், 3-ம் கட்ட ஊரடங்கிற்கான தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும் உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து