ரொனால்டோ வாங்கிய உலகின் விலை உயர்ந்த கார்

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Ronaldo 2020 08 03

Source: provided

ரோம் : பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே மிகவும் அரிதானதும், விலை உயர்ந்த புகாட்டி லா காரை வாங்கி உள்ளார்.

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே மிகவும் அரிதானதும், விலை உயர்ந்த புகாட்டி லா வொய்சர் நொயரா (Bugatti La Voiture Noire) காரை முன்பதிவு செய்துள்ளார்.  

கால்பந்தாட்ட உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார். இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இவருக்கு சொந்தமான கார்களின் ஒட்டொமொத்த மதிப்பு 264 கோடிக்கும் அதிகம் என்பது மலைப்பு தரக்கூடியதாகவே உள்ளது. விலையுயர்ந்த கார்கள் மட்டுமல்லாது ரொனல்டோவிடம் 88 அடி நீள சொகுசு படகு ஒன்றும் உள்ளது.

இதன் மதிப்பு சுமார் 41 கோடி ரூபாயாகும். 35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ஜூவண்டஸ் என்ற பிரபல இத்தாலிய கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இத்தாலி சீரி ஏ கால்பந்து தொடரில் 36 -வது முறையாக அவரின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் பிரமாதமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ரொனால்டோ இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக உலகின் மிகவும் அரிதானதும், விலை கொண்டதுமான புகாட்டி லா காரை முன்பதிவு செய்துள்ளார். 

இக்காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாயாகும். காரின் நம்பர் பிளேட்டில் சி.ஆர். என்ற தனது பெயரின் இனிஷியலை பொறித்துள்ளார்.  உலகில் இந்த ரக கார்கள் மொத்தம் 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒன்றை தான் ரொனால்டோ வாங்கியிருக்கிறார். இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. 1600 குதிரைத்திறன் கொண்ட இக்கார் வெறும் 2.4 நொடிகளில் 60 கிமீ வேகத்தை எட்டிப்பிடித்து விடும் திறன் கொண்டதாகும். இந்த கார் அடுத்த ஆண்டில் ரொனால்டோவிற்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து