முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்ட யூ.பி.எஸ்.சி.

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி  : சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகளை யூ.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாக செயல்படுகிறது. தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை பணி நியமனம் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது.எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது.

இதன் முடிவுகளை யூ.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து