முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்: அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

அயோத்தி : அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

மிகவும் சிறப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா நேற்று முன்தினம் காலையில் கவுரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள், அடிக்கல் நாட்டப்பட உள்ள ராமஜென்மபூமி வளாகத்தில் இந்த சடங்குகளை தொடங்கினர்.

ராமர் கோவில் அடிக்கல நாட்டு விழா காரணமாக அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் முக்கிய இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிரதமர் மோடி உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் வருகை தர இருப்பதால் அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி நகரம் தற்போது களைக்கட்டி காணப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ளஇயலாது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து