முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்திரத்தில் கை சிக்கி சிதைந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதி : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எந்திரத்தில் கை சிக்கி  சிதைந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்

இது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழவீரராகவபுரம்   கிராமத்தைச்  சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி திருமதி பாக்கியலெட்சமி என்பவர் சுய உதவிக்குழுவின் மூலம் தூய்மைப் பணியாளராக திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் 28.7.2020 அன்று நுண் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கை சிக்கி முற்றிலும் சிதைந்து விட்டது என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.

பாக்கியலெட்சமி அவர்களின் வலது கை சிதைந்தது பற்றிய  விவரங்கள்  எனது கவனத்திற்குத் தெரிய  வந்தவுடன்,  இவருக்கு தீவிர உயர்  சிகிச்சை அளிக்குமாறு திருநெல்வேலி  மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நான் உத்தரவிட்டேன். 

புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, பாக்கியலெட்சுமி அவர்களின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மருத்துவ செலவு முழுவதும் அரசே ஏற்கும்.

மேலும் சிறப்பினமாக  இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம்  ரூபாய் வழங்க நான்  உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி அதில் கூறியுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து