முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வில் இணைந்தால் அம்மாவின் பிள்ளைகள் வரவேற்று மகிழ்வார்கள் : வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வில் இணைந்தால் அம்மாவின் பிள்ளைகள் வரவேற்பார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் எண்ணூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது,  நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வருவதை கட்சியில் உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள். அவரோடு சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் அ.தி.மு.க.வுக்கு திரும்பி விட்டார்,  நயினார் நகேந்திரன் வந்தால் அம்மாவின் பிள்ளைகள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.  அவரை போன்று உழைப்பவர்கள், மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம்.

அத்தியாவசிய தேவைகளுக்கு இ பாஸ் வழங்கப்படுகிறது. அதில் பல விவாதங்கள் எழுந்திருக்கிறது, அது குறித்து மக்கள் தளர்வுகளை எதிர்பார்க்கிறார்கள், அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்வோம், களப்பணியாளர்களை பொறுத்தவரை தாங்களாக முன்வந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் யார் வந்து சேவை செய்ய முன்வந்தாலும் அரசு ஏற்க தயாராக இருக்கிறது, 

புதிய கல்விக்கொள்கை குறித்த விவகாரத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் கடைபிடிப்போம் என்று முதல்வர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதில் கட்டாயத் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம், மற்றபடி கல்வி வளர்ச்சிக்கு எந்த தடையும் இல்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினும் வரவேற்கிறார்,

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் வரவேற்று நன்றி தெரிவித்திருக்கிறார்கள், தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழுவும்  அமைக்கப்பட்டு முடிவும் எடுக்கப்படும்.

குப்பைவண்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அது மாற்று வாகனம் இல்லாத நிலையில் கவனக்குறைவாக நடைபெற்ற நிகழ்வு அதுதொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள்தான் இருக்கிறது கிட்டத்தட்ட 62 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது,

எனவே நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. 5,609 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டாலும் அதை விட அதிகமாக கிட்டத்தட்ட 5800 பேர் ஒரே நாளில் குணமடைந்திருக்கிறார்கள்.

மேலும் டெஸ்ட் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு குணப்படுத்தப்படுகிறது.

மேலும் சென்னையில் காய்ச்சல் தடுப்பு முகாம் மூலம் பரவலாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

அப்போது அவருடன் ஐ.ஏ.எஸ். ஆதிகாரி ஜானிடாம்வர்கீஸ், முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன், மண்டல அதிகாரி பால்தங்கதுரை, போலிஸ் உதவி கமிஷனர் பரஞ்ஜோதி உட்பட பலர் உள்ளனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து