முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 5,063பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 1,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று 108 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று 6,501 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 55,152 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரையில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவிட்டது. நேற்று இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 என்றளவில் குறைந்துள்ளது. மதுரையில் தற்பொழுது 2,242 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து