முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிவராஜ் சிங் சவுகான்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் இந்தியா முழுவதும் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள், அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. 

இதற்கிடையே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிவுரைப்படி தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி போபாலில் உள்ள சிராயூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   

இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து சிராயு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும், உடல்நலனை கருத்தில் கொடு ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து