மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Shivajirao Pati 2020 07 29

Source: provided

மும்பை : மூத்த காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் காலமானார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்தார்.  இந்நிலையில், சிவாஜிராவ் பாட்டீல் நேற்று காலை புனே நகரில் காலமானார்.

அவருக்கு வயது 88. இவர் கடந்த 1985 நவம்பர் மாதம் முதல் 1986 மார்ச் மாதம் வரை மகாராஷ்டிரா முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து