இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறிய நாள்: பிரதமருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
O Pannirselvam  2020 07 26

Source: provided

சென்னை : அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு பல்வேறு இந்து மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறிய வண்ணம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து