தமிழகம் முழுவதும் 10-ம் கடையடைப்பு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Vikkiramaraja  2020 07 26

Source: provided

சென்னை : கோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்பட 38 மார்க்கெட் சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், 

தமிழக அரசு வருகிற 10-ம் தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டும். கோயம்பேடு வணிக வளாக கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றனர்.

நிரந்தர சுகாதார மையம் அமைக்க வேண்டும். மார்க்கெட் கமிட்டி உருவாக்க வேண்டும். கடைகளுக்கு காலநேரம் நிர்ணயம், வார விடுமுறை, சுகாதார நடவடிக்கைகள் அளிக்க வேண்டும். 

கோயம்பேடு சந்தையை வருகிற 10-ம் தேதி திறப்பதற்கான உத்தரவை அளிக்க அரசு தவறினால், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் அனைத்தையும் ஒரு நாள் முழுமையாக அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை தவிர்க்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து