சித்தராமையா - எடியூரப்பா ஒரே மருத்துவமனையில் அனுமதி: மருத்துவர்களிடம் பரஸ்பர நலம் விசாரிப்பு

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      இந்தியா
Siddaramaiah-Yeddyurappa 2020 08 05

Source: provided

பெங்களூரு : கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா விரைவில் குணமடைந்து, உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதே மருத்துவமனையில் தான் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல்வர்  எடியூரப்பாவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரே மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருவதால், எடியூரப்பா உடல் நிலை குறித்து சித்தராமையாவும், சித்தராமையா உடல் நிலை குறித்து எடியூரப்பாவும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

 

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து, உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்.  அவர் எப்போதும் போல தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து