முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உகான் நகரில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்: ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 6 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

சீனாவின் உகான் நகரில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களில் 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம் அடைந்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனாவின் மத்திய நகரமான உகானில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பட்டது. அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக் கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இவர்களின் சராசரி வயது 59. ஜூலையுடன் முடிந்த முதல் கட்ட முடிவில், இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது இவர்களின் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடுகள், ஆரோக்கியமான மற்றவர்களின் நிலைக்கு மீளவில்லை. டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர்தான் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியதிருக்கிறது என பெய்ஜிங் பல்கலைக் கழகத்தின் டோங்ஸிமென் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் கூறி உள்ளார். மேலும் கொரோனா பாதித்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம் பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து