ஏர் இந்தியா விமான விபத்து: பாக். பிரதமர் இம்ரான்கான் வருத்தம்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      உலகம்
Imran Khan 2020 07 29

Source: provided

இஸ்லாமாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்நிலையில், கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையும், அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்ததையும் கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து