மும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது: பெரும் விபத்து தவிர்ப்பு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Air Asia 2020 07 29

Source: provided

ராஞ்சி : மும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதிய சம்பவத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள ராஞ்சி விமான நிலையத்தில் ஏர் ஆசியா விமானம் (ஐ5-632) ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு மும்பை நோக்கி புறப்பட தயாரானது.  அந்த விமானம் மேலெழுந்த பொழுது அதன் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளார்.  விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. 

அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  விமானத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவற்றை அறிந்து, அவற்றை சரி செய்த பின்பே விமானம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து