கேரள விமான விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Edappadi 2020 08 02

Source: provided

சென்னை : கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து  சுமார் 191 நபர்களுடன் கேரள மாநிலம், கோழிகோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்திய விமானம், தரையிரங்கும் போது விபத்துக்குள்ளாகியதில், விமானி உள்பட 18 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெரும்பாலான பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் வந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. 

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்தேன்.

இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து