மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய தயார்: மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
RB Udayakumar 2020 08 03

Source: provided

மதுரை : மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பையும் உதவியும் வழங்க வருவாய்த்துறையும் பொதுத்துறையும் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக நிவாரண முகாமிற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் செல்பி எடுப்பது மற்றும் குளிப்பதை தவிர்க்க வேண்டும். நிலச்சரிவு பாதிப்பு அபாயமுள்ள நீலகிரி கொடைக்கானல் ஆகிய மாவட்ட  நீர் நிலைகளின் கரையோர மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை கட்டுக்குள் வந்துள்ளது.  நீலகிரி மாவட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை விரைவில் மீட்க தமிழக முதல்வர் கேரளா முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கேரளா அரசிற்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.  மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பையும் உதவியும் வழங்க வருவாய்த்துறையும் பொதுத்துறையும் தயார் நிலையில் உள்ளது. நிலச்சரிவு மீட்பு பணியினை தமிழகம் கண்காணித்து வருகிறது. 

கொரோனோ பாதிப்பு காலத்தில் விவசாய பணிகள் தடையின்றி நடைபெறவும், தொழில்துறை மேம்படுத்தவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதிக காய்ச்சல் முகாம் நடத்தியதில் தமிழகத்தில் மதுரை முன் உதாரணமாக திகழ்ந்ததன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனோ சிகிச்சைக்கான அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகள் உள்ள நிலையில் ஏன் தனியார் மருத்துவமனையை நாட வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிரத்து பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.

கள நிலவரத்தை ஆய்வு செய்து தேவையான தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. முன்னதாக பொதுபோக்குவரத்து துவக்கப்பட்டதன் விளைவாக கொரோனோ பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்களை பாதுகாக்கும் நோக்கில் தளர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து