முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியா ராணுவ தளத்தில் கார் குண்டுவெடிப்பு: 8 வீரர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மொகாதிசு : சோமாலியாவில் ராணுவ தளத்தில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 வீரர்கள் உடல் சிதறி பலியாயினர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை மண்டலம் உருவானது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்றன.

இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.மொகாதிசுவின் வார்ட்டா நப்பாடா மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தின் நுழைவாயிலுக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை நிறுத்தி பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை மண்டலம் உருவானது. 

இந்த குண்டு வெடிப்பில் ராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து