கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      இந்தியா
Kerala 2020 07 03

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை தேயிலை தோட்ட பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு அதில் மலைத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட 78 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 12 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர்.

நிலச்சரிவில் சிக்கிய 26 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து