முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் பஸ்கள் குறைந்த வாடகைக்குத் தயார்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தொழில் நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும், பேருந்து தேவைப்படுவோர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு தொலைபேசியில் அழைக்கலாம் என  தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வரின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்  அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கிடுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள், பணிக்கு வர ஏதுவாக தேவைக்கேற்ப பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது தமிழக முதல்வர் கடந்த 30-7-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு வரும் ஆகஸ்டு 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75 சதவீத  பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கபட்டுள்ளார்கள். 

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும் மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர், tnexpress16gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 9445014402-  9445014416-  9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைபேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து