முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஒரு சவரன் தங்கத்தின் விலை 408 ரூபாய் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது.

கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று முன்தின விலையில் இருந்து 408 ரூபாய் குறைந்து, ரூ.42,512-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,314 ரூபாயாக இருந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் உயர்ந்திருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து