முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி: தமிழகத்தில் இயல்புநிலை மெல்ல,மெல்ல திரும்புகிறது

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25 - ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பஸ் போக்குவரத்து அறிவிக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் 161 நாட்களுக்கு பின் பஸ்கள் மீண்டும் இயங்க தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர்  போன்ற முக்கிய நகரங்களிலும் நேற்று பஸ்கள் இயங்க தொடங்கின. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை முக்கால்வாசி திரும்பிவிட்டது என்றே சொல்லலாம். வெளியூர் பஸ்கள் இயக்கப்படுவது ஒன்று தான் பாக்கி. மற்றபடி மக்களின் இயல்பு வாழ்க்கை முன்பு போல் திரும்பிவிட்டது என்று மக்களே சொல்கிறார்கள். 

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எல்லையிலுள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும்.

இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது. அரசு பேருந்துகளில் பழைய மாதாந்திர பாஸ் செப்டம்பர் 15 - ந் தேதி வரை செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று முகக்கவசம் அணிந்து பயணிகள் பயணம் செய்தனர். பஸ் ஏறும் போது அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளிவிட்டு அவர்கள் பயணம் செய்தனர். ஒரு சில பஸ்களில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிந்ததையும் காணமுடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து