முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் தொழில்நுட்ப துறையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது புதிய அத்தியாயமாக உள்ளது : மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்குதல் குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூடுதல் செயலாளர் ஹன்ஸ் ராஜா வர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்ற காணொளி காட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கிராமத்தில் இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கிராமங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை மறுமலர்ச்சி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது புதிய அத்தியாயமாக உள்ளதாகவும் இதனை நிறைவேற்ற அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு கிராமங்களில் வருவதற்கு அடிப்படை கட்டமைப்புகளை விரிவுபடுத்தப்படும் எனவும் கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வசதியை வழங்குவதால் தொழில்நுட்பத்தில் உலகளாவிய போட்டியை நாம் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் உயர்தர இன்டர்நெட் வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம் மூலம் இன்டர்நெட், கேபிள் டிவி, சேட்டிலைட் போன், வீடியோ கால் போன்ற வசதிகளை கொண்டுவரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

அதற்கான மென்பொருளை கிராமத்திலிருந்தே உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பாரத் நெட் சேவையை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்கும் அந்தந்த மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே ஐ.டி. துறையில் பணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது 

கிராமத்தில் தொழில் நுட்பத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்.மார்ச் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தியதில் இளைஞர்கள் கிராமப்புறங்களில் சொந்த ஊரிலிருந்து பணிபுரிய விரும்புவது தெரிய வந்துள்ளது.மென்பொருள் உருவாக்குவதற்கு பெரும்பாலான கணினி பொறியாளர்கள் கிராமத்திலிருந்து நகரத்தை நாடுகின்றனர், இதனால்தான் தற்போது கிராமப்புறங்களை தேடி தகவல் தொழில்நுட்பங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்திலே ஐ.டி.துறையில் தென்தமிழகத்தில் பிறந்தவர்கள்தான் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்கள்.  மென்பொருள் தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவருடைய சொந்த ஊரில் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறார்,

ஸ்ரீதருக்கு தமிழக அரசு தேவையான உதவிகள் செய்யும், கொரோனா காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமே தடை இல்லாமல் செயல்பட்டது. கொரோனா பாதிப்பு என்பது தற்காலிகமான ஒன்று, விரைவில் சீராகும்,

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், இந்தியாவிலேயே பசி இல்லாத மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து