முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.  தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பான  பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.  இரட்டை பதிவுகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து