முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தொற்றால் ஒன்றிய செயலாளர் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மயிலாடு மாவட்டம் குத்தாலம் ஒன்றிய செயலாளர் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். 

கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால உடன்பிறப்பு தமிழரசன், கிளை கழக செயலாளர், ஒன்றிய துணை செயலாளர், ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

அன்பு சகோதரர் தமிழரசனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து