முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி: அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி தந்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார் .

தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வண்ணம் தமிழகத்தின் சாமானிய முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் இயங்கும் அம்மாவின் அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை எடுத்து வருவதை நாம் அறிவோம். கொரோனா காலங்களில் கூட இதுவரை தமிழகத்தில் 41 புதிய தொழில் திட்டங்களை தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு சுமார் 30,500 கோடி ரூபாய் தொழில் முதலீட்டில் 67,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இதன் மூலம் சரித்திர சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்த நடவடிக்கையால் ஏப்ரல் முதல் ஜூன் வரை புதிய முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது இது முதலமைச்சரின் அயராது உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும் இதற்கு துணை முதலமைச்சர் துணையாக நின்று உள்ளார்.

சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாடு திட்டம் செயல்படுத்தி மேலும் வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்த தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார். 

முதலமைச்சர் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட வங்கிக்கான கூட்டங்கள் நடத்தி உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க அம்மாவின் அரசு வலியுறுத்தியதால் மத்திய அரசு கடன் திட்டத்தின் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை பெற்று இந்தியாவில் தமிழகம் முதன்மை திகழ்கிறது இது முதலமைச்சரின் மதிநுட்பத்திற்கு கிடைத்த மணிமகுடமாகும். 

அம்மா அரசு அறிவித்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன இந்த கொரோன காலத்திலும் அம்மா அரசின் கடுமையான முயற்சியின் காரணமாக அதிக முதலீட்டை ஈர்த்து சுமார் 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு தமிழகத்தில் தான் கோவிட் காலங்களிலும் தடையின்றி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

இதேபோல் இந்திய அளவில் ஜி.டி.பி. 4 சகவீதம் உள்ளது ஆனால் தமிழகத்தில் ஜி.டி.பி. சதவீதம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக பொய் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் தனது டுவிட்டரில் பக்கம் வெளியிட்டுள்ள பதில் பொய் பிரச்சாரத்தை அடையாளமாக வைத்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு நெத்தியடியாக அமைந்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் இடை விடாத பொய் பிரச்சாரத்திற்கு மாறாக கொரோனா பேரிடர் காலத்திற்கு முந்தைய 8.3 சதவீதம் நிலைக்குக் கீழாக வேலையின்மை விகிதம் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தபடும் என்று கூறிய சாமானிய முதல்வராய் சரித்திர சாதனை படைத்தது முதலமைச்சர் அவர்களின் சரித்திர சாதனை மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அம்மா அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகள் மக்களிடத்தில் எடுத்துச் சென்று மேலும் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை தோலுரித்து காட்டி உண்மையை உலகறியச் செய்ய ஆண், உறக்கமில்லாமல் களப்பணி ஆற்றுவோம் என்று கழக அம்மா பேரவை சூளுரை ஏற்பதோடு சரித்திரம் போற்றும் இந்த சரித்திரத்தை செய்துவரும் முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக நின்று பெருமை சேர்த்து வரும் துணை முதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை கோடான கோடி நன்றி தெரிவித்து வணங்கி பாராட்டி மகிழ்கிறது என்று தீர்மானத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிறைவேற்றினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து