முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபாரதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்: முக கவசம், தனி மனித இடைவெளி கட்டாயம்

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கும் தமிழக அரசின் பொது சுகாதாரச் சட்டத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது  போன்றவற்றை பின்பற்றினால் மட்டும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அரசு கூறி வருகிறது.

ஆனால் பலர் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக வணிக இடங்களில் தனிமனித இடைவெளியை  பின்பற்றாமல் பலர் கூட்டமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

இவ்வாறு விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கிடையே, இந்த விதிகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு  முடிவு செய்துள்ளது. எனவே தொற்று நோய் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முக கவசம் தனி மனித இடைவெளி கட்டாயம் ஆக்கப்படுகிறது. 

பின்பற்றாத தனி நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள், மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்கள் ,போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில்  அரசு அறிவித்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். 

அந்த  நிறுவனங்கள் தினமும் கிருமி நாசினி கொண்டு வளாகத்தை தூய்மை செய்ய வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கு வெளியே கிருமி நாசினி வைக்க வேண்டும்.

தொழிற்கூடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் இப்படி  அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது எந்த விதியை பின்பற்ற வில்லையோ அதற்கு தகுந்தாற்போல தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் கடும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ. 500 அபராதம்.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான விதிகளை மீறினால் ரூ. 500 அபராதம்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். 

கொரோனா விதிமுறைகளை மீறும் ஜிம், சலூன், ஸ்பா நிலையங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து