முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருவண்ணாமலையில் 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி ஆய்வு

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 9-ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தல், மற்றும் அரசு நலதிட்ட உதவிகள் வழங்குதல், திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புபணிகள் குறித்து ஆய்வு கூட்டம், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆகிய கூட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்துகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கூறினார். 

அம்மா விட்டுச்சென்ற பாதையில் முதல்வர்  தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று வருகிறார். தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு பணிகளில் சிறப்பாக வழிநடத்தி தமிழக மக்களை பாதுகாத்து வருகிறார். 

மேலும் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள், அரசு நலத்திட்டப் பணிகளில் தொடர்ந்து தனி கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து துறையிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அயராது உழைத்து வருகிறார். 

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வரை வரவேற்க மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் பகுதியில் கழக நிர்வாகிகள் வருகை தந்து சமூக இடைவெளியுடன் வரவேற்போம்.  இவ்வாறு சேவூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து