முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தளர்வுகளால் தொற்று அதிகரித்தால் சமாளிப்பது எப்படி? மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் 8-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 8-ம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகளும், மாநிலங்களுக்குள் பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை-காட்பாடி, மதுரை - விழுப்புரம் - செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் சென்னை வரை நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இதனால் தமிழகம் முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் அதிகளவில் வீட்டை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பரவும் ஆபத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது  போன்றவற்றை பின்பற்றினால் மட்டும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பலர் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை.

குறிப்பாக வணிக இடங்களில் தனிமனித இடைவெளியை  பின்பற்றாமல் பலர் கூட்டமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

இவ்வாறு விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கிடையே, இந்த விதிகளை மேலும் கடுமையாக்க தமிழக அரசு  முடிவு செய்துள்ளது. எனவே தொற்று நோய் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முக கவசம் தனி மனித இடைவெளி கட்டாயம் ஆக்கப்படுகிறது.  பின்பற்றாத தனி நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்படி  அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது எந்த விதியை பின்பற்றவில்லையோ அதற்கு தகுந்தாற்போல தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் கடும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்  8-ம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது, மருத்துவ சிகிச்சை வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் இதுவரை புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அது பற்றியும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் ஆலோசித்து அறிவிப்பினை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து