முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கு குறைந்த அளவில் ஆசிரியர்கள் போதும் என்பதால், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

அதே போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. 

இந்நிலையில் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

கேரளாவில் அடுத்தாண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை. தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சம்பளம் வழங்காதது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கும். தமிழக அரசு பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.

வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணி வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து