முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தளர்வுகள் அறிவிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தளர்வுகள் என்பது வாழ்வாதாரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  தளர்வுகள் என்பது வாழ்வாதரத்துக்கானது. முக கவசம் அணிவதில் தளர்வு இல்லை. பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். 

காய்ச்சல், வாந்தி அறிகுறி இருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆம்புலன்சுகள் 1005 ஏற்கனவே உள்ளன. புதிதாக 500 ஆம்புலன்சுகள் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக நடமாடும் ஆம்புலன்சுகளில் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து